இலங்கை மின்சார ( திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும்,எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது.
சட்டமூலம் மீதான விவாதம் காலை முதல் மாலை 5.30 மணி வரை இம்பெற்று முடிந்த நிலையில் சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன் பிரகாரம் சட்டமூலத்திற்கு ஆதரவாக அரசுத்தரப்பு வாக்களித்த நிலையில் எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மட்டும் வாக்களித்தது .
பொதுஜன பெரமுன,தமிழரசுக்கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,தொழிலாளர்கட்சி .ஐக்கிய தேசியக் கட்சி ,புதிய ஜனநாயக முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை,
அதன் பிரகாரம் சட்டமூலத்துக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 25 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 96 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

