கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

80 0

கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தெவிநுவர உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெரவின் காவடி பெரஹெர நிகழ்வு நாளை (7) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், இறுதி ரந்தோலி பெரஹெர நாளை மறுதினம் (8) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

பெரஹெர வீதி ஊர்வலத்தின் போது கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதி மூடப்படும் என்பதால், குறித்த காலப்பகுதியில் இந்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாற்று வழிகள் 

  • மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், மெத்தவத்த தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாத்தறை யடியன வீதிக்குத் திருப்பி, கெகணதுர சந்தியிலிருந்து வெஹெல்ல வீதி வழியாக திக்வெல்ல நோக்கிச் செல்லலாம். 
  • தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தலல்ல தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் திரும்பி, நாவொடுன்ன வீதி வழியாக வியன்னருவ சந்திக்குச் சென்று, பின்னர் திக்வெல்ல வெஹெல்ல வீதி வழியாக கெகணதுர சந்திக்குச் சென்று கெகணதுர-மாத்தறை வீதி வழியாக மாத்தறைக்குச் செல்லலாம்.