பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியை துஷ்பிரயோகம் செய்த காரணத்தினால் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அரசாங்கம், அவர் அவ்வாறு செயற்பட காரணமாக இருந்த அரசியல்வாதிகளை அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சடத்தின் 17ஆம் பிரிவின் பிரகாரம், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, அன்று அரசியலமைப்பு பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எமது கட்சியின் கபீர் ஹாசிம் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். என்றாலும் அன்றிருந்த அரசாங்கம் அவரை சட்டவிராேதமான முறையில் நியமித்துக்கொண்டபோது, அவரின் பதவியை இடைநிறுத்துமாறு தெரிவித்து எமது கட்சியின் ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் நிராேஷன் பாதுக்க ஆகியோர் உயர் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவொன்றை பெற்றுக்கொண்டனர். அதனால் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சரியான நிலைப்பாட்டில் இருந்தோம்.
ஆனால் அன்று இந்த சபையில் மக்கள் விடுதலை முன்னணி 3 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைத்துவிடயங்களுக்கும் நீதிமன்றம் செல்வார்கள். ஆனால் தேசபந்து தென்னகோனின் பதவியை இடைநிறுத்த நீதிமன்றம் செல்லவில்லை. ஏன் செல்லவில்லை என்பதை ஜனாதிபதியிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கிடையில் இருந்து டீலே இதற்கு காரணமாகும். அதேநேரம் தேசபந்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டன.அவருக்கு எதிரான விசாரணை குழுவின் அறிக்கையில் டபிள்யு 15 தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக இங்கு தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை, களனிகம வெளியேறும் இடத்தில், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறு்தப்பட்ட லாெறியை, விடுவிப்பதற்கு கட்டளையிட்டவர் தேசபந்து தென்னகோன் என்ற குற்றச்சாட்டு ஏன் தெரிவிக்கப்படவில்லை.
அதேபோன்று இளைஞர்களின் போராட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அன்று தேசபந்து தென்னகோன் வழக்கு தொடுத்தவர்கள், இன்றும் நீதிமன்றம் செல்கிறார்கள். அரசியல் தீர்மானம் ஒன்று எடுத்து அவர்களை விடுவிக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.அந்த வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. அத்துடன் யுக்திய செயற்பாட்டின்போது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்கிறதா? இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? . அதனால் அரசாங்கம் குற்றச்சாட்டு உள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்காத வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
மேலும் அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் குற்றச்சாட்டு உள்ளவர்கள் இருக்கிறார்கள்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு உள்ளர்களும் அரசாங்கத்தில் இருக்கின்றனர்.அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் விமர்சனம் தெரிவிக்கப்பட்டது. 6மாதங்களில் அதுதொடர்பான சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார். அதுதொடர்பில் எந்த விசாரணையும் இல்லை. கலாநிதி பட்டம் ஒன்று இருப்பதாக அவர் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் சட்டத்துக்கு அப்பால் சென்று இவ்வாறு செயற்பட, அவருக்கு ஆலாேசனை வழங்க அரசியல்வாதிகளும் இருந்தார்கள். அவர்கள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. அன்றிருந்த அரசியல் தலைவர்களின் தேவையை நிறைவேற்றச்சென்றதாலே தேசபந்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தேசபந்து தென்னகோனிடமிருந்து தற்போது அரச அதிகாரிகளுக்கு கற்றுக்கொள்ள பாடம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப, சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் தேசபந்துக்கு இடம்பெற்ற நிலையே ஏற்படும். அவர்களை பாதுகாக்க அரசியல்வாதிகள் யாரும் முன்வர மாட்டார்கள்.
சுகத்தில் இருந்து சட்டவிராேதமான முறையில் விிடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை. இதுெதாெடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையைகூட ஜனாதிபதி இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதேபோன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தில் அவரின் மனைவி பயணித்து வித்துக்குள்ளாகி இருக்கிறது.
சரியாக இருந்தால் ஜனாதிபதி செயலாளர் பதவி விலகி இருக்கவேண்டும். இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது என்றே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலகி முன்மாதிரியை காட்டவேண்டும். அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் வெளிநாடு சென்றவரும்போது விமான நிலையத்தில் இருந்து மதுபான போத்தல்களை எடுத்துவந்துள்ளனர்.அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்டத்தை நிலைநாட்டாமல் அவர்களை இடமாற்றி இருக்கிறார்கள் என்றார்.

