நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம் நாட்டின் நன்மை கருதி எல்லோரும் ஒன்றுபட்டு நடாத்த வேண்டும்!

59 0

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம் ஊர் நன்மை நாட்டின் நன்மை கருதி எல்லோரும் ஒன்றுபட்டு நடாத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர்  கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகொள்விடுத்துள்ளார் .குறித்த விடயம் தெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கைலாசநாதர் பிள்ளையார் கோவில் மகாகும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவேண்டும் .

பழமையும் பெருமையும் மிக்க தமிழ்வேந்தர் காலத்து ஆலயமாக விழங்கும் நல்லூர் கைலாசநாதர் பிள்ளையார் கோவில் நிண்டகாலம் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் காலம் கடந்து கொண்டிருக்கிறது இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேசத்தை எல்லாரும் ஒற்றுமையாக விரைவில் நடாத்தி முடிக்கவேண்டும்.

நிண்டகாலம் கும்பாவிஷேகம் செய்யாது பாலஸ்தாபனம்  செய்யப்பட்டு  காத்திருப்பது சைவநெறிமுறைக்கு கூடாது சைவபாரம்பரியத்திற்கு அவை இடையூராக அமைந்துவிடும். ஊர் ஏழுச்சி நாட்டின் ஏழுச்சிக்கு திருக்கோவில்களில் சிறப்பாக  பூசை  வழிபாடுகள் நடைபெறவேண்டும். கடந்த பல வருடங்களாக கைலாசா நாதர் சிவன்கோவில் ,பிளைளையார்  கோவில் வருடாந்த பெருந்திருவிழக்கள் நடைபெறுவது தடைப்பெற்றுள்ளது.

எனவே நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் மகோற்சவம் விரைவில் நடைபெறவேண்டும் ஊர் நன்மை,நாட்டின்  நன்மை கருதி எல்லோரும் ஒன்றுபட்டு  கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் மேலும்  நித்திய நைநித்திய பூசைகள் நடைபெற சைவமக்கள் நன்மை கருதி வேண்டுகிறேன் என்றார்.