விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

50 0

விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விளையாட்டை மக்கள்மயமாக்குவதற்காக, விளையாட்டுத் துறையில் மனித வளத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் முதன்மைக் கருமமாகும்.

போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத இளம் தலைமுறையினர், வயது வந்தோர், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்காக விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன், பாடசாலைக் கட்டமைப்புகள், பொது விளையாட்டு அரங்குகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்காக மூன்று திட்டங்களை அமுல்படுத்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல், கிராமிய பாடசாலைகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், மற்றும் இனங்காணப்பட்ட விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய திட்டங்களை 2025-2027 காலப்பகுதியில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மூலம் அமுல்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.