கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை தொடர்பாக, சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க நேற்று (04) தெளிவுபடுத்தினார்.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஜூன் 2025 இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்தத் தரவில் ஜூலை மாதத்திற்கான வருமானம் சேர்க்கப்படவில்லை என்றும், ஜூலை மாதத்தை சேர்த்தால் கூட இவ்வளவு வருமானம் ஈட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

