கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

46 0

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஆடியம்பலம் பகுதியில் வேன் ஒன்றினை சோதனையிட்ட போது, வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன் போது, சோதனையிடப்பட்ட வேனிலிருந்து 35 வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து கட்டநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.