லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தின் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் சற்று முன் மீட்கப்பட்டுள்ளது. உடப்புசலாவ பகுதியில் இருந்து வேலைக்காக தலவாக்கலைக்கு வந்த இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் குளிப்பதற்காக தனது நண்பனுடன் லிந்துலை – லோகி தோட்ட குலத்திற்கு திங்கட்கிழமை (04) மாலை சென்றுள்ளான். அதன் போது தவறி விழுந்ததன் காரணமாக இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இளைஞன் லிந்துலை பெல்கிரேவியா தோட்டத்தில் தனது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்து தொழிலுக்கு சென்று வந்துள்ளதாகவும் இன்று மாலை தனது நண்பருடன் குளிக்க சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு கரை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதவான் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததன் பிறகு பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிசார் தெரிவித்தனர் . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

