சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இம்மாதத்துக்குள் சமர்ப்பிக்காவிடின் வழக்குத் தாக்கல் செய்யப்படும்

46 0

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை நிறுவனத்தின் பிரதானிக்கு 2025.08.31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் தமது சமர்ப்பிக்கத்தவறும் உத்தியோகத்தர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 90 ஆவது பிரிவின் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விபரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025.03.31 ஆம் திகதியன்று சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான கூற்று விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு குறித்த ஆவணங்களை தமது நிறுவனத்தின் பிரதான ஊடாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த ஆவணங்களை நிறுவனத்தின் பிரதானிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு அதற்கு 2025.06.30 ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் 2025.08.31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் பிரதானிக்கு சமர்ப்பிக்க தவறும் உத்தியோகத்தர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 90 ஆவது பிரிவின் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

2025.06.30 ஆம் திகதி முதல் 2025.08.31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும் தாமதிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் தொடர்பில்  சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தண்டப்பணம் அறவிடப்படும்.

இதற்கமைய இதுவரையில் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான கூற்று விபரத்தை வெளிப்படுத்தாத உத்தியோகத்தர்கள் இயலுமான வகையில் தாமதமின்றி குறித்த விபரங்களை தமது நிறுவனத்தின் பிரதானிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இதனுடாக தண்டப்பணத்தின் தொகையை குறைத்துக் வரையறுத்துக் கொள்ள முடியும்.இதற்குரிய நடவடிக்கையை ஆணைக்குழு மேற்கொள்ளும்.

2025.06.30 ஆம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்பு கூற்று விபரங்களை நிறுவனத்தின் பிரதானி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தர்ப்பத்தில் குறித்த விபரங்களை நிறுவனத்தின் பிரதானி ஏற்றுக்கொள்ளாவிடின் அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான பிரிவுக்கு  0112596359/  0767011954 என்ற தொலைபேசி ஊடாகவும், 0112587287 என்ற தொலைநகல் இலக்கம் ஊடாகவும்,  assetsciaboc@gmail.com / assetsgciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் உரிய தரப்பினர் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்த முடியும்.