திருகோணமலை தில்லைநகர் சிறுவர் பூங்கா மதுபானம் அருந்தும் இடமாக மாற்றமா?

49 0

திருகோணமலை,  தில்லைநகர் பகுதியிலுள்ள சிறுவர் பூங்கா மதுபானம் அருந்துபவர்களின் இடமாக மாறியுள்ளது.

சிறுவர்களின் விளையாட்டுக்கு உகந்த இடத்தில் அமைந்துள்ளதா என்ற கேள்வி எமுகின்றது.

இந்த சிறுவர் பூங்கா ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளாக மதுபானம் அருந்துபவர்களின் உறைவிடமாக இந்த பூங்கா இரவு நேரத்தில் காணப்படுகின்றது.

இதனால் இவ் வீதியினூடாக பயணிக்கும் பொது மக்கள்,   மாணவர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுவதாக பொது மக்கள் கவலை அடைகின்றனர்.

எனவே இவ்விடயத்தில் திருகோணமலை மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.