ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரான கம்பஹா தேவா தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றபோது விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா பகுதியில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட 39 வயதுடைய தேவான்மினி திசாநாயக்க என்பவராவார்.
“கம்பஹா தேவா” எனப்படும் நபர் இன்று காலை 08.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்காக்கிற்குச் செல்லும் இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அவரை பேலியகொடை கொழும்பு வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

