கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி – மு.க.ஸ்டாலின்

59 0

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நினைவு போற்றும் மடல்.நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன்.

காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் – வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை – ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன்.

அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.தமிழே உயிராக – தமிழர் வாழ்வே மூச்சாக – தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்.

வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் கழக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.பேரறிஞர் பெருந்தகை அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர் கட்டமைத்த ஆட்சியையும் கட்டிக்காத்து, அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகாலம் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பிய சிற்பியான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில்தான், உங்களில் ஒருவனான என் தலைமையில் 6-ஆவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து, மக்கள் நலன் காக்கும் நல்லரசாகச் செயலாற்றி வருகிறது.முத்தமிழறிஞர் ஆட்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த குடிசை மாற்று வாரியம், கை ரிக்சா ஒழிப்பு, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கட்டணமில்லா உயர்கல்வி, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற எண்ணற்ற திட்டங்களின் வழியில், நமது திராவிட மாடல் அரசு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கி, இந்தியாவின் பிற மாநிலங்கள் வியந்து நோக்கிப் பின்பற்றக்கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுநீதி நாளை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர். அவர் வழியில், திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெறும் முகாம்களை நடத்தி, உரிய தீர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எளிய மக்களுக்கும் கண்ணொளித் திட்டம் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை, பெரியம்மை தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து எனப் பல மருத்துவ முகாம்கள் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல, நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் உடல்நலன் காத்திட வட்டாரங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியின் சமூகநீதிக் கொள்கைகளால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால், பொருளாதாரம் சார்ந்த திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் பயன்பெற்று உயர்ந்தது போலவே, நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும்.

கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, ஒன்றிய பா.ஜ.க அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. இவையனைத்தும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கட்டமைத்த வழித்தடத்தில் தொடரும் நம்முடைய பயணத்தின் வெற்றிகள்.

தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் தலைவர் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கின்ற வகையில் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 விடுதலை நாளில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத் தந்தார்.

மாநிலத் திட்டக்குழுவை அமைத்தார். தி.மு.கழகத்தின் ஆதரவுடன் சமூகநீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமரானபோது ஒன்றிய – மாநில உறவுகளை மேம்படுத்தும் ‘இன்டர் ஸ்டேட் கவுன்சில்’ அமைத்திட வழி செய்தார்.நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது கழக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் ..