வெளிநாடு சென்ற அயர்லாந்து நாட்டவர் மாயம்

54 0

 அயர்லாந்து நாட்டவர் ஒருவர் வெளிநாடு ஒன்றில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீடு திரும்பும்போது மாயமானார்.

இந்நிலையில், அவர் பாரீஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாரீஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அயர்லாந்து நாட்டவர்

அயர்லாந்து நாட்டவரான ராபர்ட் (Robert Kincaid, 38), மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், வீட்டுக்குப் புறப்பட்ட அவர் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்ட நிலையில், ஜூலை மாதம் 17ஆம் திகதி பாரீஸிலுள்ள Charles de Gaulle விமான நிலையத்தில் தனது இணைப்பு விமானத்தில் அவர் ஏறவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

அதாவது, ஜூலை மாதம் 17ஆம் திகதி அவர் மாயமாகிவிட்டார். அவரை அவரது குடும்பத்தினர் மொபைலில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

அதைத் தொடர்ந்து ராபர்ட்டின் குடும்பத்தினர் பாரீஸ் புறப்பட்டார்கள். ஆனால், ராபர்ட் பாரீஸ் வந்தது பிரான்ஸ் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.

ராபர்ட்டின் குடும்பத்தினர் அளித்த தகவலின்பேரில் பிரித்தானிய தூதரக அதிகாரிகளும் பிரான்ஸ் பொலிசாரும் ராபர்ட்டைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

வெளிநாடு சென்ற அயர்லாந்து நாட்டவர் மாயம்: சமீபத்திய தகவல் | Missing Ireland Man Found Alive In Paris

இந்நிலையில், ராபர்ட் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை, அவசர உதவிக்குழுவினரால் ராபர்ட் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு என்ன ஆயிற்று என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. அவர் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றும், என்றாலும், அவர் உயிருடன் கிடைத்ததே தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.