விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் உள்ள சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையம் மீது நடத்திய திடீர் சோதனையில், கசிப்புடன் இரண்டு பேர் சனின்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து,மாணிக்கபுரத்தில் விற்பனைக்காக தயாராக இருந்த 30 லீற்றர் கசிப்பு, அதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், மற்றும் ஆவணங்கள் இன்றி இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் விசுவமடு ரெட்பானா பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடையவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் நாளைய தினம் (03) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், குறித்த கிராமத்தில் இளைஞர்கள் , விளையாட்டு கழகங்கள், கிராம மக்கள் இணைந்து சட்டவிரோத சகிப்பு உற்பத்தியை ஒழிப்பதற்கு ஆர்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.





