களுத்துறை, வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்காககடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது குறித்த மீன்பிடி படகில் மூன்று மீனவர்கள் இருந்துள்ள நிலையில் அவர்கள் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிர் தப்பிய மூன்று மீனவர்களும் மற்றுமொரு படகு மூலம் வஸ்கடுவ கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

