கந்தேகம பகுதியில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

54 0

வெலிகேபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தேகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் வெலிகேபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிகேபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வெலிகேபொல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகேபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.