திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

75 0

திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.