ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்து ; 23 பேர் காயம்!

59 0

கேகாலை – அவிசாவளை  தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

இந்த பஸ்ஸில் 37 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.