யூடியூப் சேனல் வழியாக ஆசிரியை ஒருவர் தொடர்பில் பொய்யான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை பரப்பி வந்த யூடியூபருக்கு ஆறு மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி வியாழக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளார்.
ஆறு மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் கடுவலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
யூடியூப் சேனல் ஒன்று தனது புகைப்படத்தை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக கொழும்பைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர்,குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த யூடியூபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது eீதிமன்றில் ஆஜரான யூடியூபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால் குறித்த யூடியூபருக்கு எதிராக ஆறு மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

