விண்ணில் ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறியது ரொக்கெட் – அவுஸ்திரேலியாவில்

70 0
image

அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட், சில வினாடிகளிலேயே விடித்துச்சிதறியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக கில்மர் நிறுவனம் செயல்படுகிறது. குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரை மையமாக கொண்டு செயல்படும் இந்த தனியார் நிறுவனம் அரசின் நிதியுதவிகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ரொக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த கில்மர் நிறுவனம் தீர்மானித்தது.

தன்படி ‘எரிஸ்’ என்ற ரொக்கெட்டை தயாரித்தது. குறித்த நேரத்தின்படி இது புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

கில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து அந்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த ரொக்கெட் 14 நொடிகளில் வானில் பறந்து கொண்டிருந்தபோதே வெடித்து சிதறியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு மீண்டு வருவோம் என அந்த நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.