பாத் பைன்டர் பவுண்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நோமனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இந்திய பசுபிக், இந்து சமுத்திர பிராந்திய பாதுகாப்பு மற்றும் வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பரஸ்பர அக்கறைக்குரிய ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு உலகளாவிய பதற்ற நிலைகளின் போது தடையற்ற நிரம்பலை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர்கள் இலங்கையில் புதிய ஜேர்மன் முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இச்சந்திப்பில் பாத் பைன்டர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பேர்னாட் குணதிலக்கவும் கலந்துக்கொண்டிருந்தார்.

