இலங்கை பொலிஸ் பிரிவுக்கு புதிதாக 1,000 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸ் பிரிவுக்கு புதிதாக 5,000 பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு தேவையான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

