அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை !

65 0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யூடியூப் பயன்படுத்துவதை தடை செய்ய அவுஸ்திரேலியா வரலாற்றில் சிறப்புமிக்க சமூக ஊடகச் சட்டங்களை அமுல்படுத்தும் என அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல் தெரிவித்துள்ளார்.

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப்பில் பத்தில் நான்கு அவுஸ்திரேலிய சிறுவர்கள் தவறான வீடியோக்களை பார்வையிடுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தளங்கள் தங்கள் அடையாளத்தை ஊகிப்பதற்கு முன்பு சிறுவர்கள் தாங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது என வெல்ஸ்  அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“சமூக ஊடகங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது, ஆனால் சிறுவர்களை குறிவைக்கும் கொள்ளையடிக்கும் வழிமுறைகளுக்கு இடமில்லை.”

கடந்த ஆண்டு 16 வயது வரை சிறுவர்கள் பேஸ்புக், டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை  தடைசெய்யும் சட்டங்களை கொண்டுவருவதாக அவுஸ்திரேலியா அறிவித்தது.

அத்தோடு,  பாடசாலை வகுப்பறைகளில் யூடியூப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், அதற்கு விலக்கு அளிக்கப்படும் என  அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், “16 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் யூடியூப்பில் கணக்கு வைத்திருக்க முடியாது” என பிரதமர் அன்டனி அல்பானீஸ் புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டொக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட பிற தளங்களிலும் கணக்கு வைத்திருக்க முடியாது.

“அவுஸ்திரேலிய பெற்றோர்களும் குடும்பத்தினரும் தங்கள் ஆதரவைப் பெற்றுள்ளோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

வயது வரம்பு முழுமையாக செயல்படுத்தப்படாமல் போகலாம் – மதுவின் மீதான தற்போதைய கட்டுப்பாடுகளைப் போலவே – ஆனால் அது இன்னும் சரியான செயல் என்று அல்பானீஸ் கூறினார்.

அரசாங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியூட்டும் மாற்றமாகும் என யூடியூப்பின் ஊடகப்  பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, யூடியூப் என்பது இலவச, உயர்தர உள்ளடக்க நூலகத்தைக் கொண்ட ஒரு வீடியோ பகிர்வு தளமாகும், இது தொலைக்காட்சித் திரைகளில் அதிகளவில் பார்க்கப்படுகிறது,” என  நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது டிசம்பர் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடக பிரபலங்கள் தெரிவிக்கையில்,

இணங்கத் தவறியதற்காக அவுஸ்திரேலிய டொலர்கள் 49.5 மில்லியன் (US$32 மில்லியன்) வரை அபராதம் விதிக்கலாம். சட்டங்களை “தெளிவற்றது”, “சிக்கலானது” மற்றும் “அவசரமானது” என்று விவரித்துள்ளனர்.

மன ஆரோக்கியத்தை, ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் இளைஞர் நிபுணர்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக டிக்டொக் குற்றம் சாட்டியுள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான மெட்டா – இந்தத் தடை “பெற்றோர்கள் மற்றும் இளம் வயதினர்  மீது கடுமையான சுமையை” ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சட்டம் ஏனைய நாடுகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது, பலர் இதேபோன்ற தடைகளை அமுல்படுத்தலாமா வேண்டாமா என யோசித்து வருகின்றனர்.