சட்டவிரோதமாக யானைகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், யானைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை (30) பிற்பகல் 2 மணியளவில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஸ்டான்ட் ஃபோர் த வொய்ஸ்லெஸ் மற்றும் வைல்ட் ஹார்ட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்தன.









