காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள்!-இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை

68 0
image

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்” செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து  பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்தம்,இரண்டுதேசத்தினை உறுதி செய்யும் நீண்டகாலதீர்விற்கு அர்ப்பணித்தல்,ஐக்கியநாடுகள் காசாவில் மீண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இல்லாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் அமர்வில் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் சகிக்கமுடியாத நிலைமை காரணமாகவும்,இரண்டுதேசத்திற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என்ற கரிசனை காரணமாகவும் இந்த நடவடிக்கைகளை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.