ஜேர்மனிக்கு அண்டை நாடொன்றிலிருந்து பரவும் பிரச்சினை

61 0

ஜேர்மனியின் அண்டை நாடான சுவிட்சர்லாந்திலிருந்து வரும் ஒரு பிரச்சினை, ஜேர்மன் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

சுவிட்சர்லாந்தில், தக்காளி அந்துப்பூச்சி (Helicoverpa armigera) என்னும் ஒருவகை பூச்சி விவசாயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

 

தொட்ட எதையும் மிச்சம் வைக்காமல் கபளீகரம் செய்யும் குணம் கொண்டவை இந்த தக்காளி அந்துப்பூச்சிகள்.

இந்நிலையில், இந்த அந்துப்பூச்சிப் படை ஜேர்மனியை நோக்கி படையெடுத்துவருகிறது.

தெற்கு ஜேர்மனியில் இந்த அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன.

விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் ஏற்கனவே பட்டாம்பூச்சிகளின் புழுக்களால் கொண்டைக்கடலை செடிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கு அண்டை நாடொன்றிலிருந்து பரவும் பிரச்சினை | Tropical Parasite Moves From Swiss To Germany

பொதுவாக, Japanese beetle என்னும் பூச்சிகள்தான் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், பட்டாம்பூச்சிகளின் புழுக்களோ அவற்றைவிட மோசமாக இருக்கின்றன.

ஆம், அவை நூற்றுக்கும் அதிகமான உணவுப்பயிர்களை நாசம் செய்யக்கூடியவையாக உள்ளன.