யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலங்களாக யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்களும் வீட்டின் அறை ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய எதிர்க்கட்சித்தலைவர், அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் ஆவர்.
பேராதனை பொலிஸார் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ உடனடி உதவிக்கு :
– அவசர நிலைகளுக்கு தேசிய மனநல உதவி தொடர்பு எண் 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்
– சுமித்ரயோ: +94 11 2 682535/ +94 11 2 682570.

