ஹிஜ்ராபுரம் வட்டார பிரதிநிதிகளுடன் ரவிகரன் எம்.பி சந்திப்பு

83 0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபைப் பிரிவிற்குட்பட்ட, ஹிஜ்ராபுரம் வட்டார பிரதிநிதிகளுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் திங்கட்கிழமை (28) சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஹிஜ்ராபுரம் வட்டார பிரதேசசபை உறுப்பினர் ரிஷாம் ஜெமால்தீன் மற்றும் ஹிஜ்ராபுரம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் ஹிஜ்ராபுரம் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதன்போது பிரதேசசபை உறுப்பினர் ரிஷாம் ஜெமால்தீன் மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதேசசபை உறுப்பினர் மற்றும் கிராமஅமைப்புக்களின் பிரதிநிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கவனஞ்செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.