ஜேர்மனியில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பேடன்-வுர்ட்டம்பேர்க் மாகாணத்தில் உள்ள ரீட்லிங்கன் நகருக்கு அருகே காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ரயில் சாரதி உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி, 50 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதில் 25 பேர்களின் நிலை கவலைக்கிடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Deutsche Bahn நிர்வாகம் இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.மேலும், சுமார் 40 கிமீ தொலைவுக்கான ரயில் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Baden-Wurttemberg மாகாண உள்விவகார அமைச்சர் Thomas Strobl தெரிவிக்கையில்,
ஜூன் 2022 ல், தெற்கு ஜேர்மனியில் உள்ள பவேரியன் ஆல்பைன் ரிசார்ட் அருகே ஒரு ரயில் தடம் புரண்டு நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

ஜேர்மனியின் ஃபெடரல் புள்ளிவிவர அலுவலகத் தரவுகளின் அடிப்படையில், ரயிலில் பயணம் செய்வது காரில் பயணம் செய்வதை விட மிகவும் பாதுகாப்பானது, 2024 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 2,770 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

