டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “பஸ் லலியா” என்று அழைக்கப்படும் ஹேவத் லலித் கன்னங்கர என்பவரின் நான்கு சகாக்கள் ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகர் நுவன் திலகரத்ன தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஹங்வெல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 7 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

