பதில் பொலிஸ்மா அதிபரின் பெயரில் பகிரப்படும் போலி பி.டி.எஃப் ஆவணம் குறித்து எச்சரிக்கை!

69 0

பதில் பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி  பி.டி.எஃப் ஆவணம் ஒன்று (PDF) வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் ஊடாக பொதுமக்களுக்கு பகிரப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

srilanka@execs.com /polcermp@gmail.com/ andrep.atricia885@gmail.com/ ecowastaxs@gmail.com/ ccybermp@gmail.com/ vinicarvalh08@hotmail.com உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக இந்த போலி பி.டி.எஃப் ஆவணம் (PDF) பகிரப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள் இலங்கை பொலிஸுக்கு அல்லது பதில் பொலிஸ்மா அதிபருக்கு சொந்தமான உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள்  அல்ல என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான போலி பி.டி.எஃப் ஆவணம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.