பிரபல wwe மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். மல்யுத்த போட்டியின் முடி சூடா மன்னனாக ஒரு காலத்தில் விளங்கிய ஹல்க் ஹோகன் WWE நிறுவனம் இன்று மாபெரும் சாம்பிராஜ்யத்தை படைத்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவரது இயற்பெயர் அவரது உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போலியா (Terry Gene Bollea).
ஹல்க் ஹோகன் தன்னுடைய 71 வது வயதில் ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மயங்கி கிடந்து இருக்கின்றார்.
இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவசர கால உதவிக்கு அழைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து மருத்துவ உதவி குழுவினர் ஹல்க் ஹோகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதே அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஹல்க் ஹோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்ததாக முதல் கட்ட செய்திகள் வெளியாகி உள்ளது.
ஹல்க் ஹோகன் அண்மையில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டதற்காக சிகிச்சை மேற்கொண்டார்.
அப்போது அவர் கோமாவில் சென்றுவிட்டதாக பல வதந்திகள் கிளம்பின. எனினும் அவர் நலமுடன் இருந்ததாக அவருடைய மனைவி தெரிவித்த நிலையில், தற்போது ஹல்க் ஹோகன் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது.
ஹல்க் ஹோகனின் இந்த திடீர் மறைவுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

