மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வயோதிபப் பெண்ணொருவர் தன் வீட்டு வாசலை பெருக்கிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பெண் 78 வயதுடையவர் ஆவார்.
மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியே பறிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

