எழுத்தாளனின் பெயர் சூட்டப்பட்ட வீதி – மாத்தளை மலரன்பனுக்கு கௌரவம்!

131 0

 

ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது.

மாத்தளை மலரன்பன் என்ற எழுத்தாளன் நான்கு முறை அரச சாஹித்திய விருதை வென்றவர். அமைதியான குணப்பண்புடைய இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது எழுத்துப்பணியை கௌரவிக்கும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தினை அண்மித்த ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குச் செல்லும் வீதி “ஆறுமுகம் மலரன்பன் வீதி” எனப் பெயரிடப்பட்டு, எழுத்தாளன் மாத்தளை மலரன்பனுக்கு பாரிய பாராட்டு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகார, கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் மத்திய மாகாண ஆளுநர்  பேராசிரியர் சரத் அபயகோன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வாழும்போது வாழ்த்தப்படும், அங்கீகரிக்கப்படும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் பட்டியலில் மாத்தளை மலரன்பனும் இடம்பிடித்துள்ளார்.