“தெமட்டகொடை சமிந்த”வின் உறவினப் பெண் உட்பட இருவர் கைது

73 0

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெமட்டகொடை சமிந்த” என்பவரின் உறவினப் பெண் உட்பட இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் மாளிகாவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு – மாளிகாவத்தை, லக்ஹிரு செவன தொடர்மாடி குடியிருப்புக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஆணும் 48 வயதுடைய பெண்ணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.