முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து ; இளைஞன் பலி

75 0

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்திற்கு மத்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்று மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞனும் காயமடைந்துள்ள நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.