பிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

80 0

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.

ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு (CC) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (23) ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய 27 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில்,  25 ஆம் திகதி  அன்று உயர்  நீதிமன்றத்தில் பிரியாவிடை உரை ஆற்றவுள்ளார்.

நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன நீதித்துறை சேவை ஆணைக்குழுவின்  முன்னாள் உறுப்பினர் ஆவார். அவர் நீதிபதித்துறையில் பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.