களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சீரற்ற காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 9 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலையத்தின் அறிக்கையின்படி, பேருவளை பகுதியில் கடலில் காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கடும் காற்றின் காரணமாக எட்டு வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தொடர்ச்சியாக நிலைமையை கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

