கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உணவகங்கள் திடீர் சோதனை

76 0

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் தொடர்ச்சியாக கிண்ணியா பிரதேசத்திலுள்ள உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகள்  கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் அவர்கள் தலைமையில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் நசுருதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பரிசோதனை(19) இடம் பெற்றுள்ளது.

இதன்போது உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதும் காலவதியானதுமான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வெளிக்கட்டிவைத்த 2 உணவங்களுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டது.