பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

75 0

பதுளை, பசறை பிரதான வீதியில் பசறை கோயில் கடை பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (20) தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த டயர் விற்பனை நிலையம் தீப்பரவல் ஏற்படும் போது மூடி இருந்ததுள்ளது.

குறித்த பகுதியின் ஊடாக சென்ற லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்யும் நபர், மூடியிருக்கும் டயர் விற்பனை நிலையத்தில் இருந்து புகை வருவதை அவதானித்து அயலவர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் அயலவர்கள் அனைவரும் இணைந்து பாரிய முயற்சியின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை எனவும்,  தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம். பியரடண தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சேத விபரங்கள் தொடர்பான விபரங்களும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.