பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கல் இப்பா” என அழைக்கப்படும் கயான் பிரசாந்த் என்பவர் ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை மத்துகம, போபிட்டிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 11 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
“கல் இப்பா” நீண்ட நாட்களாக துபாயில் தவைமறைவாக இருந்த நிலையில் அந்நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

