ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குள் அமைந்த யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எசல பெரஹரா காரணமாக, இன்று சனிக்கிழமை (19) இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை போக்குவரத்துக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பெரஹரா, ஸ்வர்ண வாலுகாராம விகாரை அருகிலிருந்து ஆரம்பித்து, கேகாலை – கரவனெல்லை வீதி வழியாக கரவனெல்லை நோக்கிச் சென்று, பின்னர் ருவான்வெல்ல ராஜசிங்க பாடசாலைக்கு அருகே திரும்பி, ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கேகாலை – கரவனெல்லை வீதியில், வராவல சந்தி மற்றும் தல்துவ சந்தியில் போக்குவரத்து இரவு 10.00 முதல் 12.00 வரை தடை செய்யப்படும்.
குறித்த நேரத்தில் பயணம் செய்யும் சாரதிகள், கீழ் காணும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கேகாலையில் இருந்து அவிசாவளை நோக்கி செல்லும் வாகனங்கள், வராவல சந்தியில் இருந்து புலத்கொஹுபிடிய வழியாக, பருச்செல்ல, எட்டியாந்தோட்டை ஊடாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இணைந்து, அவிசாவளை நோக்கி பயணம் செய்யலாம்.
அதேபோல், அவிசாவளையில் இருந்து கேகாலை கேகாலை நோக்கி பயணம் செய்யும் வாகனங்கள்,தல்துவ சந்தியில் இருந்து வலமாக திரும்பி அமிதிரிகல வீதியில், மஹதெனிய, கோனகல்தெனிய, நிட்டம்புவ வீதி வழியாக ருவான்வெல்ல கடந்து கேகாலை நோக்கி செல்லலாம்.

