விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட தடை!

68 0

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதால் விமானங்களும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

விமானங்கள் பயணிக்கும் வேளைகளில் வானில் அங்கும் இங்கும் பட்டங்கள் பறப்பதால் விமான விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.