அம்பாறையில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

76 0

அம்பாறையில் உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலஹிட்டியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பில் 65 வயதுடைய காணி உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.