மூதூர் – பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 39வது நினைவேந்தல்

97 0

மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 44 பேர் ஆயுத தாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்ட பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (16) இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட உறவுகளினாலும், பொதுமக்களினாலும்  படுகொலை செய்யப்பட்டவர்களை புதைத்த இடத்தில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 39 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் தமக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தற்போது இருக்கின்ற புதிய அரசின் ஆட்சியிலாவது தமக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என பாதிக்கப்பட்ட உறவுகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு  A15 பிரதான வீதியின் மல்லிகைத்தீவு சந்தியில் இருந்து 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெரியவெளி பாடசாலை அகதிமுகாமில் பாரதிபுரம், மல்லிகைத்தீவு, மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாடசாலை கட்டிடத்திலும் அவ் வளாகத்தினுள் ஓலைக் கொட்டில்கள் அமைத்தும் தங்கி இருந்தனர். 1986ம் ஆண்டு யூலை மாதம் 16ம் திகதி அதிகாலை 03:00 மணியளவில் மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களில் இருந்த மக்கள் 300 இற்கும் மேற்பட்ட ஆயுததாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டும் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.  இப் படுகொலை சம்பவத்தில் 02 பெண்கள் உட்பட 44 அப்பாவிப் பொதுமக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.

கிராமத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகள் வீடுகளில் தங்கியிருந்த 25 ஆண்கள் மற்றும் 2 பெண்களை படுகொலை செய்ததுதுடன் பெருவெளி அகதி முகாமில் தஞ்சம் அடைந்திருந்த மக்களை சுற்றிவளைத்து அங்கிருந்த 17 ஆண்களை ஒன்று திரட்டி ஓர் இடத்தில் முழந்தாழிட வைத்து குடும்பத்தினர் கண் எதிரே சுட்டுக் கொன்றனர். பின்னர் குறித்த சடலங்கள் கட்;டைபறிச்சான் GPS இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த தினத்தில் அங்கிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் இவர்களில் 8 பேர் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதோடு 3பேர் சிறையில் அடைக்கப்பட்டு சில வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களது 17 பேரின் சடலங்களும் கட்;டைபறிச்சான் GPS இராணுவ முகாமில் வைத்து பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

01.இராசையா செல்லத்துரை – பாரதிபுரம்

02.ஆரியத்தம்பி சிவசுப்ரமணியம் – பாரதிபுரம்

03.சித்திராவி கனகய்யா – பாரதிபுரம்

04.முத்துக்குமார் விநாயகமூர்த்தி – பாரதிபுரம்

05.இராசையா குமாரதுரை – பாரதிபுரம்

06.வேலுப்பிள்ளை ஆறுமுகம் – மல்லிகைத்தீவு

07.கோணாமலை இராசநாயகம் – மல்லிகைத்தீவு

08.கதிரவேல் நாகேந்திரம் – மல்லிகைத்தீவு

09.கோணாமலை வீரக்குட்டி – மல்லிகைத்தீவு

10.கதிர்காமத்தம்பி வைரக்குட்டி – மல்லிகைத்தீவு

11.வெற்றிவேல் குணசிங்கம் – மல்லிகைத்தீவு

12.சித்திரவேல் குணசிங்கம் – மல்லிகைத்தீவு

13.சித்திரவேல் ஜெகன் – மல்லிகைத்தீவு

14.சித்திரவேல் பத்தக்குட்டி – மல்லிகைத்தீவு

15.ஆலப்பிள்ளை – மல்லிகைத்தீவு

16.செல்லையா சுந்தரலிங்கம் – மல்லிகைத்தீவு

17.பொன்னையா – மல்லிகைத்தீவு

18.மாரிமுத்து சிறிகந்தராசா – மல்லிகைத்தீவு

19.வைரமுத்து வைரக்கட்டயன் – மல்லிகைத்தீவு

20.மாரிமுத்து யோகராசா – மல்லிகைத்தீவு

21.சி. மகேந்திரன் – மணற்சேனை

22.வீரக்குட்டி மயில்வாகனம் – மணற்சேனை

23.செல்லையா சித்திரவேல் – மணற்சேனை

24.வடிவேல் நவரெட்;ணராசா – மணற்சேனை

25.இராசகுலம் – மணற்சேனை

26வைரமுத்து குணசேகரம் – மணற்சேனை

27அழகுதுரை சத்தியசீலன் – மணற்சேனை

28செல்லத்தம்பி தர்மராசா – மணற்சேனை

29.கந்தவனம் கமலம் – மணற்சேனை

30.சிவசுப்ரமணியம் யோகதாஸ் – மணற்சேனை

31.பத்தக்குட்டி கனகநாயகம் – மணற்சேனை

32.மகேந்திரன் – மணற்சேனை

33.சின்னத்துரை குணநாயகம் – பெரியவெளி

34கந்தையா தங்கராசா – பெரியவெளி

35.காளிக்குட்டி அருளம்பலம் – பெரியவெளி

36.பசுபதி மோகனதாஸ் – பெரியவெளி

37.சேதுநாதன் கோணாமலை – பெரியவெளி

38.தம்பிமுத்து தங்கராசா – பெரியவெளி

39.தியாகராசா வடிவேல் – பெரியவெளி

40.நாகராசா சரஸ்வதி – பெரியவெளி

41.பத்தக்குட்டி மகாலிங்கம் – பெரியவெளி

42.பத்தக்குட்டி யோகராசா – பெரியவெளி

43.பிரான்சிஸ் மார்டின் – இருதயபுரம்

44.அரசரெட்டினம் ஆலப்பிள்ளை – புன்னையடி, ஈச்சிலம்பற்று.