கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார்.
இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால், விரக்தியில் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
அதனை அவதானித்த வீட்டார், அவரை மீட்டு புங்குடுதீவு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

