வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று புதன்கிழமை (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினரான சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய தினம் அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளர்.
பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பை பெற்றிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடானது வீட்டின் வாயிலை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

