பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சிக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவர் கடவுச்சீட்டு மற்றும் வீசா இன்றி தவறுதலாக சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவிற்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தவறை ஒரு தனியார் விமான நிறுவனம் செய்துள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் விமான நிறுவனம் செய்த தவறுக்கு லாகூர் விமான நிலைய நிர்வாகத்தை பொறுப்பு கூறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணி,
உள்நாட்டு விமான சேவை நுழைவாயிலில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு விமானத்தில் ஏறி விமான பணிப்பெண்ணிடம் தனது டிக்கெட்டைக் காட்டிய போதிலும், தவறான விமானத்தில் ஏறியதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை.
இதன்போது, சர்வதேச பயணத்திற்கான கடவுச்சீட்டோ, வீசாவோ தன்னிடம் இருக்கவில்லை.
“விமானம் புறப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்தும் ஏன் இன்னும் கராச்சியை அடையவில்லை என நான் கேள்வி எழுப்பினேன். இதன்போது, விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் செய்த தவறுக்கு என்னை குற்றம் சாட்டினார்கள்.
விமான நிறுவனத்திடம் தன்னை கராச்சிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டபோது, இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் என கூறினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் ஃபெடரல் புலனாய்வு நிறுவனம் (FIA) விசாரணை நடத்தும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்த அதற்கு நான் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தேன்,” என குறிப்பிட்டுள்ளார்.