நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராஜகிரிய – கலபலுவாவ பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாகன விபத்தைத் தொடர்ந்து குழு ஒன்றுடன் சேர்ந்து நபரொருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குள்ளாகிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

