நிர்மாணிக்கப்பட்டு வந்த சுற்றுலா விடுதி தீப்பற்றி எரிந்து நாசம்

58 0

எல்ல, கந்தேகும்புர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த சுற்றுலா விடுதி ஒன்று தீ விபத்தில் எரிந்து நாசமாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றினால் தீ வேகமாகப் பரவி, முழு இடத்தையும் விரைவாகச் சூழ்ந்து, முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை தீயணைப்புத் துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் , பொலிஸார் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.